நிழற்குடை அருகே நிற்காத பஸ்கள்

Update: 2022-08-07 15:40 GMT
கரூர் மாவட்டம், ஈரோடு பகுதியில் இருந்து கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஓலப்பாளையம் பிரிவு சாலை அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளின் நலன் கருதி நிழற்குடை கட்டப்பட்டது. வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் அந்த நிழல்க்கூடத்தில் அமர்ந்திருந்து பேருந்துகளில் ஏறி, இறங்கி சென்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் பஸ்கள் நிற்காததால் பயணிகள் இங்கு வந்து நின்று பஸ்சுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிழற்குடையில் இருந்த பயணிகள் அமர்ந்து செல்லும் காங்கிரீட் பலகைகளை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று விட்டனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்