போடி-தேனி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் போடி சுப்புராஜ் நகர் வெண்ணிமலை தோப்பு பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சுரங்கப்பாதை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீரை வெளியேற்றி சுரங்கப்பாதை பணியை தொடங்க வேண்டும்.