தேனி மாவட்டம் கோட்டூர் ஊராட்சியில், அரசு அலுவலகங்கள், வங்கி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான பஸ்கள் கோட்டூர் ஊராட்சியில் நிற்பதில்லை. இதனால் அலுவகங்களுக்கு வேலை செய்பவர்கள் அவதியடைந்து வருகின்றர். எனவே அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.