கள்ளக்குறிச்சி நகரின் மைய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து பல்வேறு கிராமங்களுக்கும் நகர்புறங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. துருகம்சாலை, சேலம் சாலை, நான்குமுனை சந்திப்பு, காந்தி சாலைகளில் ஒருசில வியாபாரிகள் தங்கள் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் காலை, மாலை பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆகவே போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.