வருசநாட்டில் இருந்து சிங்கராஜபுரம், கீழப்பூசனூத்து வழியாக அரண்மனை புதூருக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் வசதி இல்லாமல் அந்த கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி அரண்மனைபுதூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே வருசநாடு-அரண்மனை புதூர் இடையே மீண்டும் அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.