கடமலைக்குண்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அய்யனார்புரம், அண்ணாநகர், ஆத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் அரசு டவுன் பஸ்களில் சென்று வருகின்றனர். அதில் தேனிக்கு 2 அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் மாணவிகள் பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.