நாமக்கல் பிரதான சாலையில் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. நீண்ட நாட்களாகியும் இதுவரை இந்த பணி முடியாததால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.