பஸ் வசதி தேவை

Update: 2023-02-26 17:42 GMT
சங்கராபுரம் அருகே செம்பராம்பட்டு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இருந்து சங்கராபுரத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் மாணவிகள் ஆட்டோக்களிலும், நடந்தும் செல்லும் நிலை உள்ளதால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே செம்பராம்பட்டு-சங்கராபுரத்திற்கு செல்ல பள்ளி நேரங்களில் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்