நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் முன்பு உள்ள மழைநீர் வடிகாலை சிமெண்டு சிலாப்புகள் கொண்டு மூடி உள்ளனர். இதில் ஒரு சிமெண்டு சிலாப்பு உடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சிமெண்டு சிலாப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.