நாமக்கல் மணிக்கூண்டு அருகே செல்லும் குடிநீர் குழாயில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு நீர்கசிவு ஏற்பட்டது. இதை சரிசெய்ய அப்பகுதியில் சாலையோரம் குழிதோண்டப்பட்டு உள்ளது. தடுப்புகளும் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.