நாமக்கல் - மோகனூர் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு வரும் சிலர் ஆஸ்பத்திரியின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்து வரும் ஆம்புலன்ஸ் டிரைவர்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே வாகனங்களை உரிய இடங்களில் நிறுத்த நடவடிக்கை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.