சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்

Update: 2023-01-29 11:22 GMT

தஞ்சை புதுஆற்றங்கரையோரத்தில் உள்ள சாலையில் குதிரைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிதிரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் குதிரைகள் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வரும் வாகனங்கள் குதிரைகள் மீது மோதி விபத்துகளில் சிக்குகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி