நாமக்கல் பிரதான சாலையில் நேதாஜி சிலை அருகில் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த போலீசார் பேரிக்கார்டு வைத்து உள்ளார். இந்த பேரிக்கார்டில் ஒன்று பழுதாகி சாலை பகுதியில் நீண்டு காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பழுதான பேரிக்கார்டை அப்புறப்படுத்தி புதிய பேரிக்கார்டு அமைக்க வேண்டும்.