கும்பகோணம் காமராஜர் சாலை ரெயில் நிலையத்தில் இருந்து மகாமககுளம் மணிக்கூண்டு வரை உள்ள சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இந்த சாலை பகுதியின் ஓரங்களில் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகளும்,போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் மேற்கண்ட சாலையில் அடிக்கடிபோக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?