நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ரெயில் பாதையை கடக்க வசதியாக சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதையில் மழை பெய்தால் சுமார் 1 அடி முதல் 2 அடி வரை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.