போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2022-10-30 15:44 GMT

தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையில் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் மாடுகள் மீது மோதி அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி