நாமக்கல் நகரில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது சகஜமான ஒன்றாகி விட்டது. துக்க காரியங்கள், விசேஷ நிகழ்ச்சிகள் எதற்கு சென்றாலும் சரக்கு வாகனங்களில் ஏறி செல்கிறார்கள். அதிலும் அதிக அளவில் ஆட்கள் ஏற்றி செல்லப்படுகிறார்கள். இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கும் பட்சத்தில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.