நாமக்கல்லில் இருந்து பாண்டமங்கலத்திற்கு 9 -ஏ என்ற எண் கொண்ட டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. இதனால் பாண்டமங்கலத்தில் நடக்கும் சாந்தைக்கு வரும் வியாபாரிகள் தங்கள் பொருட்களை எடுத்து செல்ல வசதியாக இருந்தது. இந்தநிலையில் அந்த டவுன் பஸ் ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை இயக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் இரவில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் அந்த வழித்தடத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.