நிழற்குடை வேண்டும்

Update: 2022-10-05 16:16 GMT

கும்பகோணம் மேம்பாலம் இறக்கத்தில் சுக்கான் கேட் பகுதியில் நீடாமங்கலம் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் வழியாக,மன்னார்குடி,திருவாரூர்,நன்னிலம்,பூந்தோட்டம் மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் சென்று வருகின்றன. ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பொதுமக்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் நிற்கக்கூடிய நிலைமை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொதுமக்கள், கும்பகோணம்.

85084 86433

மேலும் செய்திகள்