மதுக்கூடமாகும் நடைமேடை பாலம்

Update: 2022-10-02 17:03 GMT

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக நடைமேடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரெயில் நிலையத்தின் வடக்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடை மேம்பாலத்தில் போதிய மின்விளக்கு வசதியில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சமூக விரோதிகள் சிலர் இந்த இடத்தில் அமர்ந்து மதுகுடித்து விட்டு செல்கின்றனர். மேலும் மதுப்பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி மதுக்கூடமாக மாறிவருகிறது. இதன்காரணமாக பயணிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்