சாலையோரத்தில் நிறுத்தப்படும் லாரிகள்

Update: 2022-10-02 17:01 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை -முத்துப்பேட்டை சாலையில் நவீன அரிசி ஆலை உள்ளது. இந்த அரிசி ஆலைக்கு தினமும் ஏராளமான லாரிகளில் நெல், அரிசி மூட்டைகள் கொண்டு வந்து செல்கின்றன. இதனால் இந்த சாலையின் இரு புறமும் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்