தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகர மேம்பாலம் இறக்கம் காரைக்கால் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக லாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?