திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 1 மணி அளவில் பாடியூர், கொசவப்பட்டி வழியாக ஆண்டிப்பட்டிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?