தேனி லட்சுமிபுரத்தில் இருந்து பெரியகுளம் வரை அதிக அளவில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் அடையாள குறியீடு எதுவும் இல்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே தேவையற்ற இடங்களில் இருக்கும் வேகத்தடைகளை அகற்றுவதோடு, மீதமுள்ள வேகத்தடைகளில் அடையாள குறியீடு வரைய வேண்டும்.