தஞ்சை மாவட்டம் ஒரியூரில் இருந்து பட்டுக்கோட்டை பகுதிக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். இதனால் மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் எப்போதும் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதன்காரணமாக பயணிகள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். குறிப்பாக மாணவர்கள் அதிகளவில் பஸ்சின் மேற்பகுதியில் அமர்ந்து கொண்டு ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர். இதனை பார்க்கும் பெற்றோர்கள், பொதுமக்கள் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடுமோ? என அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், பயணிகள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளாமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?