நாமக்கல் பிரதான சாலையில் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகே பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள் எளிதில் சாலையை கடக்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வேகத்தடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. பின்னர் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மீண்டும் வேகத்தடையை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.