பெங்களூரு அசோக் நகர் சர்ச் சாலையில் இருபுறங்களிலும் மாநகராட்சி குப்பை லாரிகள், கார்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.