நாமக்கல் மணிக்கூண்டு அருகே பூங்கா சாலைக்கு பிரிந்து செல்ல எம்.ஜி.ஆர். வளைவு உள்ளது. இந்த வளைவின் அருகே பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பூங்கா சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகளும் சந்திக்கும் இடத்தில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே விபத்து தவிர்க்க அங்கு போக்குவரத்து போலீசார் கண்காணித்து, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்த வேண்டும்.