நாகர்கோவிலில் இருந்து மணவாளக்குறிச்சி, சின்னவிளை வந்து செல்லும் தடம் எண் 5D/39 என்ற பேருந்து தினமும் ஒழுங்கான முறையில் இயக்கப்பட்டு வந்தது. குறிப்பாக நாகர்கோவிலில் இருந்து காலை 8:15 மணிக்கு புறப்படும் பேருந்து சின்னவிளைக்கு 9:00 மணியளவில் வந்து, உடனே கிளம்பி நாகர்கோவிலுக்கு செல்லும்.
அந்த நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பயணம் செய்ய சின்னவிளை பேருந்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சுமார் 15 நாட்களுக்கு மேலாக காலை நேரத்தில் மட்டும் மேற்படி பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மாலை வேளையில் மட்டும் அந்த பேருந்து இயக்கப்படுகிறது.
குளச்சலில் இருந்து மணவாளக்குறிச்சி வழியாக நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் காலையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்வதால் மணவாளக்குறிச்சியில் இருந்து செல்லும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஆகவே காலையில் மட்டும் நிறுத்தப்பட்ட அந்த பேருந்து அனைத்து வேளைகளிலும் சீராக இயக்கப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.