நாமக்கல் பஸ்நிலையம் நகரின் மைய பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ்நிலையத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் பஸ்கள் நிறுத்த தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில டிரைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தாமல் ஆங்காங்கே பஸ்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் பஸ்களை ஒழுங்காக நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிசங்கர், நாமக்கல்.