நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 நடைபாதை மேம்பாலங்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த நடைபாதை மேம்பாலங்கள் தற்போது பயனற்ற நிலையில் உள்ளன. அதுமட்டும் இன்றி சில சமூக விரோத செயல்களும் அங்கு நடைபெற்று வருகிறது. எனவே நடைபாதை மேம்பாலங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.