நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம், களங்கானி, கல்யாணி, புதன் சந்தை, செல்லப்பம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் நிழற்கூடங்கள் உள்ளது. அந்த நிழற்கூடங்களுக்கு அருகே பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. பஸ் நிறுத்தம் இருந்த இடத்திற்கு பதில் வேறு இடத்தில் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளதால் பஸ்கள் அங்கு நிறுத்தப்படுவதில்லை என கூறப்படுகிறது. அதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே நிழற்கூடங்கள் இருக்கும் இடத்தில் பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.