முதலியார்பேட்டையில் இருந்து புதுவை நகர பகுதிக்கு வர பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களை மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இதனால் ஏழை மக்கள் அதிக செலவு செய்யவேண்டி இருக்கிறது. எனவே குறிப்பிட்ட நேர இடைவெளியில் கடலூர் சாலை வழியாக பஸ் நிறுத்தம், கோரிமேட்டு, லாஸ்பேட்டைக்கு மினி பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.