அந்தியூர் தவுட்டுப்பாளையம் திருவள்ளுவர் வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.