கோவை மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட கருப்பகவுண்டர் வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை தூர்வாரி பல மாதங்கள் ஆகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.