மாடுகளின் கூடாரமான பூங்கா

Update: 2024-11-03 10:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பல்லாவரம் திருத்தணி நகர் பகுதியில் அசோகா பூங்கா உள்ளது. இந்த பூங்கா சரியாக பராமரிக்கப்படாமல் குப்பைகள் தேங்கி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், மாடுகளின் கூடாரமாகவும் உள்ளது. இங்கு மாடுகள் சுற்றித்திரிவதால் அந்த பகுதி மக்கள் யாரும் இந்த பூங்காவிற்கு வருவதில்லை. பல ஆண்டுகளாக இதே நிலையில்தான் உள்ளது. பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் பூங்காவில் உள்ள மாடுகளை அப்புறப்படுத்திவிட்டு, பூங்காவை பராமரிக்க ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்