ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தை அருகில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பூங்காவிற்கு விளையாட வரும் சிறுவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவர்கள் விளையாட பூங்காவை சீரமைக்க வேண்டும்.