ஆயக்குடியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்கா புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் அங்குள்ள விளையாட்டு பொருட்கள் சேதமாகி கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள், சிறுவர்கள் விளையாட வசதியின்றி சிரமம் அடைகின்றனர். பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.