ரசீது கொடுக்கப்படுமா?

Update: 2023-10-08 17:03 GMT

தர்மபுரி பஸ் நிலையத்தின் அருகே ராஜகோபால் பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் நுழைவு வாயிலில் பகுதியில் அமர்ந்து இருப்பவர்கள் பூங்காவிற்கு வரும் பெரியவர்களிடம் ரூ.10-ம், சிறுவர்களுக்கு ரூ.5-ம் வசூலிக்கிறார்கள். ஆனால் அதற்கு ரசீது கொடுப்பதில்லை. இந்த பூங்காவில் கட்டணம் தொடர்பான அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் பூங்காவிற்கு வருபவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த பூங்காவில் கட்டணம் உள்ளதா? இல்லையா? என்பதை இங்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தவும், இந்த பூங்காவை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்