பழனி அருகே வரதமாநதி அணை பகுதியில் சிறுவர் பூங்கா உள்ளது. ஆனால் இந்த பூங்கா பராமரிப்பு இன்றி, அங்குள்ள உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பூங்காவை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.