கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. அங்கு குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் உடைந்து உபயோகிக்க முடியாமல் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது குடித்து விட்டு காலி பாட்டில்களை வீசி செல்கின்றனர். எனவே பூங்காவை முறையாக பராமரிக்கவும், மதுப்பிரியர்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.