பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இவை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. மேலும் எந்த நேரமும் பூட்டியே வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பொருட்கள் பழுதடைந்து வீணாகி வருகின்றன. மேலும் அந்த உடற்பயற்சி கூடம் மற்றும் பூங்காவை பயன்படுத்த முடியாமல் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அவற்றை மீண்டும் திறந்து வழக்கம்போல் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.