தர்மபுரி செந்தில் நகரில் அரசு நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்திற்கு வரும் சிறுவர், சிறுமிகள் விளையாடுவதற்காக விளையாட்டு கருவிகளுடன் கூடிய பூங்கா நீச்சல் குள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விளையாட்டு கருவிகள் மற்றும் பூங்கா முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளன. மேலும் புதர் மண்டி காணப்படுகிறது. எனவே புதர்கள் மண்டியுள்ள இந்த பூங்கா மற்றும் இங்குள்ள விளையாட்டு கருவிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேந்திரன், தர்மபுரி.