தர்மபுரி நகரின் மைய பகுதியில் தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் வனத்துறை சார்ந்த அலுவலகங்கள் அருகருகே செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தினமும் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இவர்களுடைய பயன்பாட்டிற்காக இந்த அலுவலகங்கள் அருகே அமைக்கப்பட்டுள்ள கழிப்பிட வளாகங்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இதனால் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கழிவறைகளை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?