நூலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-17 14:30 GMT
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டமங்கலத்தை அடுத்த சீனிவாசபுரத்தில் ஊர்ப்புற நூலகம் உள்ளது. இங்கு புத்தகங்களை வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை.மேலும்,நூலக கட்டிடம் பராமரிப்பின்றி விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் விரிசல்கள் வழியாக மழைநீர் கசிந்து புத்தகங்கள் நனைந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள நூலக கட்டிடத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்