தர்மபுரி தாலுகா அலுவலகம் வனத்துறை சார்ந்த அலுவலகங்கள் அருகருகே செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்கள் அருகே தினமும் வந்து செல்லும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. இவை முறையான பராமரிப்பின்றி புதர்கள் மண்டிய நிலையில் காணப்படுகிறது. இதனால் இவற்றை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கழிப்பறை வளாகங்களை முறையான பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.