சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அல்சா டௌன்ஸ் வில்லே பகுதியில் உள்ள பூங்காவில் கடந்த மூன்று மாதங்களாக குப்பைகள் சேர்ந்து குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த பூங்காவை மாநகராட்சி ஊழியர்களும் துப்புறவு பணியாளர்களும் சரிவர பராமரிக்காததால் பார்ப்பதற்கே அலங்கோலமாக உள்ளது. எனவே குப்பைகளை தினமும் அகற்றுவதற்கும் பூங்காவை சரியாக பராமரிப்பதற்கும் மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.