புதிய ரேஷன் கடையை திறப்பார்களா?

Update: 2025-07-06 19:56 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சியில் ராமகிருஷ்ண உடையார் தெரு, புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெரு ஆகிய 2 இடங்களில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ராமகிருஷ்ண உடையார் தெரு ரேஷன் கடைக்கு பதிலாக புதிய ரேஷன் கடை பெருமாள் கோவில் தெரு பழைய பேரூராட்சி கட்டிடம் இருந்த இடத்தில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அந்தக் கடையை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் புதிய ரேஷன் கடையை திறப்பார்களா?

-பிச்சாண்டி, கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்