கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் அணுக்குமலை ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பான்கொட்டாய் பகுதியில் ரூ.5¼ லட்சத்தில் பணிகள் முடிந்த நிலையில் உள்ள சமுதாய கழிவறை கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவறையை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
-சுரேஷ், அணுக்குமலை.