ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடை பஜாரை ஒட்டி அதிக மக்கள் நடமாட்டம் காணப்படும் பகுதியில் அமைந்து உள்ளது. அந்த வழியாக காலை, மாலை வேளையில் பள்ளி முடித்ததும் மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். டாஸ்மாக் கடையில் மதுபானத்தை குடித்து விட்டு சிலர் அங்கேயே போதையில் தள்ளாடுகிறார்கள். போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாற்றுவார்களா?
-வெங்கட்ரமணா, ஆற்காடு.